தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது… வானிலை எச்சரிக்கை…!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த மாவட்டங்களில் மழை வெளுக்க போகுது… வானிலை எச்சரிக்கை…!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை,

சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்து 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.