Latest News
என்னது கூட்டம் கம்மியா இருக்குதா?…அப்போ உடனே குளிக்க கிளம்பிற வேண்டியது தான் குற்றாலத்துக்கு!…
குற்றாலத்தில் ஒவ்வொரு நாளும் சீசன் நிலவரத்தில் தொடர்ந்து மாற்றங்கள் இருந்து கொண்டே தான் வருகிறது. ஒரு நாள் வெயில் உச்சத்தில் இருக்கிறது, ஒரு நாள் ரம்மியமான சூழல் இப்படி தினசரி சின்னச் சின்ன மாற்றங்கள் தான். இருந்த போதும் குளிக்க வருபவர்களை ஏமாற்றாமல் தொடர்ந்து மகிழ்வித்து வருகிறது அருவிகளில் விழுந்து வரும் தண்ணீரின் அளவு.
இன்று குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் ஆர்பரித்து கொட்டுகிறது தண்ணீர். குறிப்பாக ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் ஃபால்ஸ் உள்ளிட்ட பிரதான அருவிகளில் விழும் தண்ணீர் படு ஜோர் தான். ஆர்ச்சை தாண்டி விழாத அருவி நீர். இதானல் ஆனந்தக் குளியல் போட்டு வரும் சுற்றுலா பயணிகள். இப்படி தான் இருக்கிறது குற்றாலம் இன்று காலை பதினோரு மணி நிலவரப்படி.
வெயில் கொஞ்சம் அதிகமாவே தான் இருந்து வந்தது. குற்றாலத்திற்கே உரித்தான சாரலை இன்று தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நிலை தான் இருக்கிறது. திடீர் திடீரென லேசான காற்று அடித்து ஆறுதல் தருகிறது. ஆனந்தப் பட வேண்டியதாக இருக்கும் ஒரே விஷயம் அருவிகளின் விழுந்து வரும் தண்ணீர் தான்.
அதே போல ஆறுதல் தரக்கூடிய இன்னொரு விஷயம் என்னவென்றால் இன்று காலை நிலவரப்படி குளிக்க வருகை தந்த சுற்றுலா பயணிகளின் கூட்டம் இயல்பை விட சற்று குறைவாகவே இருக்கிறது என்றே தான் சொல்லியாக வேண்டும். அதிக நேரம் குளித்து ஆனந்தப் பட நினைப்பவர்களுக்கு இன்றைய நாள் மிகப் பொருத்தமாகவே இருக்கும்.