விருதுநகர் மினி பேருந்து விபத்து… முதலமைச்சர் அறிவித்த நிதியுதவி…!

விருதுநகர் மினி பேருந்து விபத்து… முதலமைச்சர் அறிவித்த நிதியுதவி…!

விருதுநகர் மாவட்டத்தில் மினி பேருந்து கவர்ந்து 3 மாணவர்கள் பல 4 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவித்திருக்கின்றார்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம் மம்சாபுரம். இந்த கிராமத்தில் இருந்து திருவில்லிபுத்தூர் நோக்கி மினி பேருந்து ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது இந்த பேருந்து இன்று திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தார்கள் மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த மூன்று மாணவர்கள் உட்பட 4 நபர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து இருக்கின்றார். மேலும் இவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டம், மம்சாபுரம் முதன்மை சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இன்று காலை 8 மணி அளவில் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் மாடசாமி என்பவரும், வாசுராஜ், நிதீஷ் குமார் ஆகிய இரண்டு மாணவர்கள் மற்றும் சதீஷ்குமார் என்ற கல்லூரி மாணவர் ஆகிய நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும் இந்த விபத்தில் காயமடைந்து திருவில்லிபுத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்கள் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 50000 முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் தெரிவித்திருக்கின்றார்.