tamilnadu
உண்மையான சாம்பியன் நீங்கதான்… வினேஷ் போகத்துக்கு புகழாரம் சூட்டிய முதல்வர் மு க ஸ்டாலின்..!
ஒலிம்பிக் தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினோத் தொடர்ந்து பலரும் ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் நீங்கள் தான் உண்மையான சாம்பியன் என்று தெரிவித்திருக்கின்றார்.
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தியா இதுவரை மூன்று வெண்கல பதக்கங்களை பெற்றிருக்கின்றது. பதக்க பட்டியலில் 63வது இடத்தில் உள்ளது . நேற்று இரவு நடைபெற்ற மல்யுத்த பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரை இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் இருவர் மோதினர்.
இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 5-0 என்ற புள்ளி கணக்கில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ இடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப் போட்டிற்கு முன்னேறி இருந்தார். இதன் மூலம் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் உறுதியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இறுதிப் போட்டி இன்று நடைபெற இருந்தது. போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்ப்ரெஸ்ட்டண்ட் என்பவரை எதிர்க்கொள்ள இருந்தார். இந்நிலையில் உடல் எடை வினேஷ் போகத்துக்கு சில கிராம்கள் கூடியிருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த பலரும் வினேஷ் போகத்க்கு ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் “அனைத்து வகையிலும் வினேஷ் போகத்தான் உண்மையான சாம்பியன். நீங்கள் மிகவும் வலிமையாக எதிர்ப்பாற்றல் உடன் அமைதியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய விதம் லட்சக்கணக்கான இந்திய மகள்களுக்கு ஒரு முன்னுதாரணம். சில கிராம் எடை காரணமாக நீங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது உங்களின் சாதனைகளை ஒருபோதும் மறைத்து விடாது. நீங்கள் ஒரு பதக்கத்தை தவற விட்டிருக்கலாம். ஆனால் நம்ப முடியாத அர்ப்பணிப்பால் எங்கள் ஒவ்வொருவரின் இதயத்தையும் வென்று விட்டீர்கள்” என்று முதல்வர் மு க ஸ்டாலின் பதிவிட்டு இருக்கின்றார்.