Connect with us

டாஸ்மாக் வேண்டும் என்று போராடிய பெண்கள்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்… யார் செஞ்ச வேலை இது..?

tamilnadu

டாஸ்மாக் வேண்டும் என்று போராடிய பெண்கள்… கடைசியில் நடந்த ட்விஸ்ட்… யார் செஞ்ச வேலை இது..?

டாஸ்மாக் வேண்டுமென்று பெண்கள் போராடிய விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டு இருக்கின்றது.

தர்மபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொன்னாகரம் என்ற பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆண் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து எங்கள் ஆதனூர் பகுதியில் டாஸ்மாக் மது கடை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தார்கள்.

பொதுவாக எப்போதும் எங்கள் பகுதியில் டாஸ்மாக் வேண்டாம், எங்கள் பகுதியில் இருக்கும் டாஸ்மாக்கை வேறு இடத்திற்கு மாற்றங்கள் என்றுதான் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுப்பார்கள். ஆனால் பெண்கள் பலரும் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தில் மதுக்கடை வேண்டும் என்று கூறி மனு கொடுத்த சம்பவம் மிகப்பெரிய வினோதத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் தர்மபுரியில் டாஸ்மாக் வேண்டும் என பெண்கள் போராடிய விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டு இருக்கின்றது. இந்த சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்திய பெண்கள் கூறியிருந்ததாவது “எந்த போராட்டத்திற்கு செல்கிறோம் என்றெல்லாம் எங்களுக்கு சொல்லவில்லை.

தலைக்கு ரூபாய் 300 கொடுக்கின்றோம் என்று கூறி போராட்டத்திற்கு அழைத்தார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற பிறகுதான் போராட்டம் குறித்த தகவலே தெரிந்தது. போராட்டத்திற்கு அழைத்து சென்றவர்கள் கூறியதை பேட்டியில் கூறியிருக்கின்றோம்” என்று தெரிவித்திருக்கின்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த பேட்டி வைரலானதை தொடர்ந்து யார் பார்த்த வேலை இது என்று பலரும் கேலி செய்து வருகிறார்கள்.

More in tamilnadu

To Top