tamilnadu
விஜயகாந்தின் பிறந்தநாள்… 71 பேருக்கு 71 நிமிடத்தில் டாட்டூ… வைரலாகும் புகைப்படம்…!
மறைந்த நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் 72 ஆவது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
விஜயகாந்த் பிறந்து 71 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைவதை முன்னிட்டு 71 நபர்களுக்கு டாட்டூ போட்டு உலக சாதனை நடைபெற்றிருக்கின்றது. 71 பேருக்கு 71 நிமிடங்களில் விஜயகாந்த் முகத்தை டாட்டு போட்டு உலக சாதனை நிகழ்த்தி காட்டப்பட்டிருக்கின்றது.
கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் என்று 71 பேருக்கு 71 டாட்டு கலைஞர்கள் ஒரே நேரத்தில் 71 நிமிடங்களில் டாட்டூ போட்டு முடித்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தொடங்கி வைத்தார்.