Latest News
ஆழ்கடலில் தத்தளித்த 12 மீனவர்கள் விரைவில் இந்தியா திரும்புவார்கள்… விஜய் வசந்த் எம்பி…!
ஆழ்கடலில் தத்தளித்த 12 மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் இந்தியா திரும்புவார்கள் என்று விஜய் வசந்தி எம்பி தெரிவித்திருக்கின்றார்.
குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் வெளிநாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் தங்கி மீன் பிடித்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் தொழில் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இரவிபுத்தன் துறை பகுதியை சேர்ந்த அருளப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 11ஆம் தேதி கொச்சித் துறைமுகத்திலிருந்து அருளப்பன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த இரண்டு மீனவர்கள் மேற்குவங்கத்தை சேர்ந்த 3 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றார்கள்.
இவர்கள் 15ஆம் தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இவர்களது விசைப்படகில் எந்திர கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது. இதனால் இவர்கள் ஆழ்கடலில் தத்தளித்து வந்தார்கள். இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தற்போது தெரிவித்திருந்ததாவது “குமரி மாவட்டத்தில் நான்கு மீனவர்கள் உட்பட 12 இந்திய மீனவர்கள் ஆழ்கடலில் படகு பழுதடைந்தது காரணமாக தத்தளித்து வந்தார்கள்.
அவர்கள் தற்போது எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்கள் கடலில் தத்தளிப்பதை அறிந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஓமன் தூதரகத்தை தொடர்பு கொண்டு அவர்களை பத்திரமாக மீட்பதற்கு கோரிக்கை வைத்தேன். அவர்கள் மீட்கப்பட்டு இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை உதவியுடன் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர். அக்டோபர் முதல் நாள் இந்த 12 மீனவர்களும் அவர்களது விசைப்படகும் இந்தியா வந்தடையும்” என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.