tamilnadu
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு… விஜய் வசந்த் எம்பி பரிசு…!
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு வசந்த் அண்ட் கோ சார்பாக பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரியில் ரோகினி பொறியியல் கல்லூரியில் வசந்த் அண்ட் கோ நிறுவனம் சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம் பி பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசினை வழங்கி கௌரவித்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.