---Advertisement---

மக்கள் நல சேவகனாக பணியாற்றுவேன்… நெஞ்சில் கை வைத்து உறுதிமொழி ஏற்ற த.வே.க தலைவர் விஜய்..!

Published on: August 22, 2024
---Advertisement---

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகராக இருக்கும் நடிகர் விஜய். தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்கின்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி இருக்கின்றார். இந்த கட்சியின் கொடி இன்று காலை அறிமுகப்படுத்தப்பட்டது.

கொடி அறிமுக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் காலை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்றினார் நடிகர் விஜய். பின்னர் அனைவரிடமும் பேசினார். அதில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் நெஞ்சில் கை வைத்து சொன்ன உறுதிமொழி என்னவென்றால் “நமது நாட்டின் விடுதலைக்காகவும். நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.

நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை. சகோதரத்துவம், மதநல்லிணக்கம். சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை. சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நல சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” என்று தெரிவித்தார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now