tamilnadu
வரும் 22ஆம் தேதி… எல்லாரும் ரெடியா இருங்க… தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்யும் விஜய்…?
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியை கொடியை வரும் 22ஆம் தேதி நடிகர் விஜய் அறிமுகம் செய்து வைக்க உள்ள தகவல்கள் வெளியாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். திரைப்படங்களில் மிக பிஸியாக நடித்து வரும் இவர் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கின்றார். இந்த கட்சி மூலமாக அரசியலில் களமிறங்கும் இவர் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்து கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் தனது முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முன்கூட்டியே விஜய் கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முக்கிய நிர்வாகிகளின் முன்னிலையில் கட்சி கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்ய இருக்கின்றார்.
மேலும் கட்சியின் கொடி பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கட்சியின் அடிப்படைக் கொள்கைக்கு ஏற்ப மக்களை ஒன்று படுத்தும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகின்றது. நடிகர் விஜய் அடுத்ததாக ஹச் வினோத் இயக்கத்தில் தனது கடைசி திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேரமும் அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.