tamilnadu
விளையாட்டில் தோற்ற மாணவர்கள்… ஆசிரியர் செய்த கொடூர சம்பவம்… பகிர் வீடியோ…!
விளையாட்டு போட்டியில் மாணவர்கள் தோற்ற காரணத்தால் ஆசிரியர் ஆத்திரமடைந்து அவர்களை எட்டி உதைத்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மற்ற பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது, இதில் கூடைப்பந்து போட்டியில் அப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தோற்றதாக கூறப்படுகின்றது. இதனால் ஆத்திரமடைந்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை மாணவர்களை தரையில் அமர வைத்து தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கின்றார்.
அது மட்டும் இல்லாமல் ஷூ காலால் ஆவேசமாக அவர்களை எட்டி உதைத்து கன்னத்தில் அறைந்து இருக்கின்றார். இது தொடர்பான அதிர்ச்சிகரமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதை பார்த்த பெற்றோர்கள் அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி பலரின் கண்டனங்களை பெற்று வருகின்றது.