தமிழகத்தில் இருக்கும் ஆளுநர் ஆர் என் ரவி போல் தற்குறி யாருமே இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக பேசி இருக்கின்றார்.
தமிழகத்தில் பிஹெச்டி படிப்பில் தரம் இல்லை என்று ஆளுநர் ரவி கூறியிருந்தார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதில் அளித்து இருக்கின்றார். சென்னை தேனாம்பேட்டை காமராஜனார் அரங்கில் வைகோ பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘தினமும் எதையாவது உளறிக் கொண்டிருக்கின்றார் ஆளுநர் ரவி.
இதைப்போல் மோசமான ஆளுநர் எந்த மாநிலத்திலும் இல்லை. ஆளுநர் ரவியை போல தற்குறி யாருமே கிடையாது. முன்னாள் ஆளுநரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். இந்த ஆளுநரை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். திமுகவுக்கு மதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும். மது ஒழிப்பு போராட்டத்தை மதிமுகவை போல் மற்ற எந்த கட்சியும் நடத்தியது கிடையாது.
ஜனநாயகத்தில் கருத்து சொல்வதற்கு இடம் உண்டு என்ற வகையில் திருமாவளவன் கருத்து தெரிவித்திருக்கின்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க மதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தால் அது குறித்து கட்டாயம் யோசிப்போம்.
கோவை அன்னபூர்ணா உணவக உரிமையாளர் அவமதிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன். முதலீடுகள் இருப்பது தொடர்பாக எதிர்கட்சிகள் அரசியலுக்காக முதல்வரை குற்றம் சாட்டி வருகிறார்கள். ஈர்க்கப்பட்ட முதலீடு குறித்து முதலமைச்சர் தெளிவாக கூறிவிட்டார். இதற்கு எதுக்கு அறிக்கை என்று அவர் குறிப்பிட்டு இருக்கின்றார்.











