தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடுது… உதயநிதி துணை முதல்வரானதற்கு எடப்பாடி விமர்சனம்…!

தமிழகத்தில் தேனாறும், பாலாறும் ஓடுது… உதயநிதி துணை முதல்வரானதற்கு எடப்பாடி விமர்சனம்…!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றதற்கு தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடுகின்றது என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருக்கின்றார்.

சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறியிருந்ததாவது “சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒருவர் விழுந்து உயிரிழந்தார். பள்ளம் தோண்டப்பட்ட பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தால் இந்த சம்பவம் நடைபெற்றது .

ஆக இனி மழைநீர் வடிகால் கால்வாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும். அத்தோடு அந்த சாலை அதிகமான மாணவர்கள் குழந்தைகள் செல்லும் பாதையாக இருக்கும் பட்சத்தில் அதனை கவனத்தில் கொண்டு தோண்டப்பட்ட பள்ளத்திற்கு அருகில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மழை நீர் கால்வாய் அமைக்கும் பணி மிக மிக முக்கியமானது. அதனை மெத்தனமாக செய்து வருகின்றது இந்த அரசு.

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறார்கள். சுப்ரீம் கோர்ட் அவருக்கு பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் ஜாமீன் வழங்கியுள்ளது. செந்தில் பாலாஜி ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வந்த போது முதலமைச்சர்கள் செந்தில் பாலாஜியை வருக வருக என்று வரவேற்றார். உன் தியாகம் பெரியது உறுதி அதிலும் பெரியது என்று கூறினார். முதல்வர் செந்தில் பாலாஜிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்.

அதனால் தான் செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக பதவி ஏற்க வைத்திருக்கின்றார் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளின் பெயரில் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் கொடுத்துள்ளது. செந்தில் பாலாஜி நிபந்தனர்களை மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? என்ற சந்தேகம் தற்போது மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.

மேலும் பல நாட்களாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆவார் என்று ஊடகங்களில் தகவல் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. உதயநிதி தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடுகின்றது. திமுகவில் உள்ள மூத்த உறுப்பினர்களுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படவில்லை. வரும் தேர்தலில் வாரிசு அரசியலுக்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைப்போம்’ என்று அவர் கூறினார்.