தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை பொறுப்பேற்கின்றார்.
தமிழகத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தார். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு க ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றார்.
மே 29ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு துணை முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் மு க ஸ்டாலின் 2011 ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி முடியும் வரை துணை முதல்வர் பதவியில் இருந்தார். தமிழகத்தின் இரண்டாவது துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வம் இருந்தார். 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்வராக ஓ பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார்.
அதை தொடர்ந்து தற்போது மூன்றாவது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க இருக்கின்றார். ஏற்கனவே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வராக பதவி ஏற்க இருக்கின்றார். துணை முதல்வராக பதவி ஏற்க உள்ள உதயநிதி ஸ்டாலின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையை கவனிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இன்று மாலை 3:30 மணிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்று கூறப்படுகின்றது.