Connect with us

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்… உதயநிதி ஸ்டாலின் உறுதி…!

Latest News

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்… உதயநிதி ஸ்டாலின் உறுதி…!

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்திருக்கின்றார்.

தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றிற்கும் உதயநிதி ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்ததாவது ‘தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவானது 2024-25 கல்வி ஆண்டுக்கு ரூ.3585.99 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில் ஒன்றிய அரசின் 60 சதவீத பங்களிப்பாக அளிக்க வேண்டியது ரூ.2151.59 கோடி ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதத்தில் தொடக்கத்தில் முதல் தவணை பெறப்படும் நிலையில் இந்த ஆண்டு உரிய தொகையை உரிய காலத்தில் விடுவிக்கவில்லை. இது தொடர்பாக தமிழகம் மு.க.ஸ்டாலின் கடந்த 27ஆம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து நிதியை விடுவிக்குமாறு நேரில் சென்று வலியுறுத்தினார்.

ஆனாலும் மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த ஒரு தகவலும் வரவில்லை. நமது திராவிட மாடல் அரசு மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நாளில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் நிதி பரப்படாத நிலையிலும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் மூலம் சுமார் 32,500 அவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கான செப்டம்பர் மாத ஊதியத்தை விடுவிப்பது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு ஆவணம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நம் திராவிட மாடல் அரசு அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கும்’ என்பதையும் தெரிவித்து இருக்கின்றார்.

More in Latest News

To Top