திமுக அரசு எப்போதும் மக்களுக்கு துணையாக நிற்கும்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!

திமுக அரசு எப்போதும் மக்களுக்கு துணையாக நிற்கும்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!

புழல் அருகே இருக்கும் தனியார் பள்ளி வளாகத்தில் 2124 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது “மக்களுக்கு திமுக அரசு எப்போதும் துணை நிற்கும். திமுக அரசு எப்போதும் மக்களுக்கு செய்ய வேண்டிய அனைத்து சேவைகளையும் செய்து வருகின்றது. இந்த அரசு நமக்கு துணை நிற்பார்கள் என்பதை பாராளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற செய்து நிரூபித்துள்ளீர்கள்.

இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை என்பது அவசியம். இதனை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. இதன் அவசியம் அறிந்து 1970 இல் கலைஞர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் என்பதை தொடங்கினார். தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியமாக முதல்வர் மு க ஸ்டாலின் தரம் உயர்த்தி மக்களுக்கு சேவை செய்து வருகின்றார் என்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மு க ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், முத்துசாமி, மா சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.