tamilnadu
அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 150 புதிய பேருந்துகள்… தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி…!
அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 90.52 கோடி ரூபாய் மதிப்பிலான விஎஸ் 5 என்ற 150 பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. சென்னை பல்லவன் சாலை மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியை செய்து தொடங்கி வைத்தார். மேலும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு நவீன தொழில் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 200 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.
இதில் முதற்கட்டமாக 150 பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முதல் முறையாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பயணிகளின் சொகுசு பயணத்திற்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளின் வசதிக்காக 50 பேருந்துகளின் கீழ் படுக்கைய வசதி செய்யப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையே அதிகரித்த இடம் மற்றும் தடுப்பு வசதி கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக சார்ஜிங் போர்டுகள் மற்றும் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. 150 பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் பஸ்ஸில் ஏரி அமைந்து அதில் உள்ள வசதிகளையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர், சேகர்பாபு, மேயர் பிரியா, போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோரும் உடன் இருந்தார்கள்.