tamilnadu
அமைச்சர் உதயநிதி துணை முதல்வரா…? முதல்வர் ஸ்டாலினின் முடிவு இதுதான்… அவரே சொன்ன தகவல்…!
சென்னை கொளத்தூரில் நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் முதல்வர் ஸ்டாலின் இடம் சில கேள்விகளை கேட்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமான அளவில் எடுக்கப்பட்டுள்ளதா? என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக இருக்கின்றது என்று கூறினார். மற்றொரு செய்தியாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வரவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு அதற்கு முதல்வர் ஸ்டாலின் ‘வலுத்திருக்கிறதே தவிர பழுக்கவில்லை ‘ என்று மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
மேலும் முதல்வர் மு க ஸ்டாலின் வருகிற 22ஆம் தேதி அமெரிக்க செல்கிறார். உலக முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொள்ள நிலையில் அதற்கு முன்பாக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக நியமிக்கப்படலாம் என்றும் பேசப்பட்டு வந்தது.
ஆனால் முதல்வர் ஸ்டாலின் இன்று அளித்து இருக்கக்கூடிய பேட்டியில் தற்போதைக்கு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வாய்ப்பில்லை என்பதை தான் சூசமாக கூறிவிட்டு சென்றிருக்கின்றார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.