விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்க இருக்கின்றார். இது மட்டுமில்லாமல் தமிழக அமைச்சரவையில் ஆறு அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றார். மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை, ராஜகண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தங்கம் தென்னரசுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்பட்டிருக்கின்றது. மேலும் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. அவருக்கான இலாக்கா பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியுடன் கோவி செழியன், ராஜேந்திரன், எஸ் எம் நாசர் ஆகியோரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே ராமச்சந்திரன் ஆகியோர் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்க.ள் அமைச்சர் அவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கும் கே ராமச்சந்திரனுக்கு அரசு தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றது. புதிய அமைச்சர்களின் பதவி ஏற்பு விழா இன்று மாலை 3:30 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். அமைச்சரவை மாற்றம் தொடர்பான முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.











