நான் கைதாவதற்கு அமைச்சர் உதயநிதி தான் காரணம்… சவுக்கு சங்கர் பரபரப்பு…!

நான் கைதாவதற்கு அமைச்சர் உதயநிதி தான் காரணம்… சவுக்கு சங்கர் பரபரப்பு…!

என் கைதுக்கு அமைச்சரு உதயநிதி தான் ஸ்டாலின் என்று சவுக்கு சங்கர் குற்றச்சாட்டி இருக்கின்றார்.

பெண் போலீசாரே அவதூறாக பேசிய காரணத்தால் youtube சவுக்கு சங்கர் மீது கோவை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நீலகிரி போலீஸ் சாரும் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் ஊட்டி கோர்ட்டில் அவர் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் அனுமதி கேட்டிருந்தனர்.

இதையடுத்து போலீசார் ஒருநாள் காவல் எடுத்து விசாரணை நடத்துவதற்கு போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்தியதில் நேற்று மாலை மீண்டும் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்திருந்தார்கள். பின்னர் அவரை சென்னை சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.

இதில் அவருக்கு வயிற்று வலி எனக்கூறி மயக்கம் அடைந்ததாக கூறப்படுகின்றன. இதையடுத்து மதியம் 12:30 மணியளவில் சவுக்கு சங்கர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. சிகிச்சை முடிந்து மீண்டும் காவல்துறை வேனில் ஏறுவதற்காக சவுக்கு சங்கர் வந்தபோது வேனியில் இருந்தபடியே என் கைதுக்கு உதயநிதி தான் காரணம். உதயநிதி உத்தரவின் பேரில் என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்கு போட்டு கைது செய்து வருகின்றனர் என்று தெரிவித்து இருக்கின்றார்.