Latest News
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு… நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடப் போகும் விஜய்…!
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு தொடர்பான நாளை நடிகர் விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி விரைவில் அரசியலில் களம் காண இருக்கின்றார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இது தொடர்பான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கட்சிக்கொடி மற்றும் அறிமுக பாடல் போன்றவை வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்திருந்தார்.
அதன்படி நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு தொடர்பான பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி சாலையில் மாநாடு நடத்துவதற்கு 85 ஏக்கர் நிலத்தை அந்த கட்சியினர் தேர்வு செய்திருக்கிறார்கள் .
அதன்படி வருகிற 23ஆம் தேதி மாநாடு நடத்த இருப்பதாகவும். இதற்காக பாதுகாப்பு வழங்க கோரி விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் கட்சி சார்பாக மனு கொடுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இதனிடையே மாநாடு நடத்த அனுமதி அளிப்பது தொடர்பாக 21 கேள்விகளை போலீசார் கேட்டிருக்கிறார்கள்.
இந்த 21 கேள்விகளுக்கும் விஜய் தரப்பிலிருந்து பதில் கொடுக்கப்பட்டது. இந்த பதில் தொடர்பாக போலீசார் விரைவில் பதில் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அந்த கட்சியின் தலைவரான விஜய் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகின்றது.