Latest News
பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மரியாதை… வைரல் புகைப்படம்..!
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் நினைவிடத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாபெரும் தலைவர் பெரியார் அவர்களுக்கு இன்று 146 வது பிறந்தநாள். இவரின் பிறந்த நாளை முன்னிட்டு காலை முதலே ஏகப்பட்ட பிரபலங்கள் பெரியாரின் சமத்துவம் பற்றி பேசி வருகிறார்கள். மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் காலையில் முதலில் பெரியார் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காலையில் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருந்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவின் மிகப் பிரபல நடிகராகவும் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி வருங்காலத்தில் அரசியல் தலைவராகவும் மாறயிருக்கும் நடிகர் விஜய் தந்தை பெரியாரின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு சென்று அவர் மரியாதை செலுத்திய இருந்தார். பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவம், சம உரிமை, சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியளிப்போம் என்று காலையில் பதிவிட்டு இருந்த நிலையில் தற்போது அவர் நேரில் சென்று மரியாதை செலுத்திய இருப்பது குறிப்பிடத்தக்கது.