Connect with us

9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

tamilnadu

9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பணியாற்றி வந்த 9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி திருச்சி கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த எஸ் குத்தாலிங்கம் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார்.

தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் கண்காணிப்பாளராக முத்து மாணிக்கம் என்பவர் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார். ராஜபாளையம் துணைக்காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரீத்தி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்.

அதை தொடர்ந்து வேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் நியமிக்கப்பட்டிருக்கின்றார். நெல்லை புறநகர் சப் டிவிஷன் காவல் டிஎஸ்பியாக இருந்த பாலச்சந்திரன் தற்போது மதுரை காவல் மாவட்ட சப் டிவிஷன் டிஎஸ்பி-ஆக இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றார்.  தாம்பரம் காவல் ஆணையராக இருந்த இளஞ்செழியன் மணிமங்கலம் காவல் உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

More in tamilnadu

To Top