Latest News
பொங்கலுக்கு ஊருக்கு போக போறீங்களா?…. ட்ரெயின் டிக்கெட் முன்பதிவு… வர 12-ம் தேதி ரெடியா இருங்க…!
பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பொங்கல் உள்ளிட பண்டிகை நாட்களில் சென்னையில் இருந்து சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள். இதில் பெரும்பாலானோர் ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்வார்கள்.
பயணிகளின் வசதிக்காகவும் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்கும். அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி திங்கட்கிழமை போகிப் பண்டிகையும், 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமையும், 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல் புதன்கிழமையும் கொண்டாடப்பட உள்ளது .
இதை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்வோர் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அந்த வகையில் ஜனவரி 10ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 12ஆம் தேதியும், 11ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர் செப்டம்பர் 13ஆம் தேதியும், ஜனவரி 12ஆம் தேதிக்கு வரும் 14ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கின்றது.
ஜனவரி 19ஆம் தேதிக்கு பயணம் செய்ய விரும்பும் பயணிகள் வரும் 15ஆம் தேதி முன்பதிவை ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்து இருக்கின்றது.