Latest News
தேர்வு விடுமுறை… ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்… அலைமோதும் கூட்டம்…!
தேர்வு விடுமுறையால் ஏற்காட்டில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் குவிந்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று தொடங்கி வரும் வாரம் வரை விடுமுறை விடப்பட்டிருப்பதால் சுற்றுலா தளங்களுக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகிறார்கள். ஏற்காட்டில் நிலவிவரும் குளு குளு சீசனை அனுபவிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளா. கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருவார்கள்.
குறிப்பாக அரசு விடுமுறை நாட்கள் வார இறுதி நாட்கள் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடந்ததால் சுற்றுலாப் பயணிகள் இன்றி ஏற்காடு வெறிச்சோடி இருந்தது.
இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் காலையிலேயே சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கின்றது. அவர்கள் இங்கு உள்ள முக்கிய சுற்றுலா தளங்களான லேடிஸ் சீட், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ஐந்திணை பூங்கா, பொட்டானிக்கல் கார்டன், பக்கோடா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று கண்டு மகிழ்ந்து வருகிறார்கள்.
மேலும் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள். காலை நேரத்திலேயே படகு இல்லம், சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் கலை கட்டியது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக மலைப்பாதை, ஏற்காடு, அண்ணா பூங்கா, ஏரி பூங்கா சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.