Latest News
கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு… வெளியான அதிரடி அறிவிப்பு…!
கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அரசு சார்பாக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றது.
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு சீசன் காலம் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். தமிழகம் மட்டும் இல்லாமல் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்து வருகின்றனர்.
இயற்கை எழில் நிறைந்த மலைகள், நட்சத்திர ஏரி, குணா குகை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை பார்வையிட்டு வருகிறார்கள். இந்நிலையில் கொடைக்கானல் பசுமை மற்றும் சுற்றுச்சூழல்களை பாதுகாக்க வேண்டும் என்றால் பிளாஸ்டிக் இல்லாத கொடைக்கானலை உருவாக்க வேண்டும் .
அதனால் ஐந்து லிட்டருக்கு குறைவாக பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டை கொடைக்கானலில் தடை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதனால் கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடுக்க மாவட்டம் வட்டார அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காணிப்பு குழு கொடைக்கானலில் உள்ள கடைகள் வியாபார நிறுவனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கடைகள் நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அந்த கடைகளுக்கு அபராதம் விதிப்பது, கடைகளை பூட்டி சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட வேண்டும்.
5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் அதை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் வரை அபாரதம் விதிக்கப்படும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டிருக்கின்றது. மேலும் இன்று முதல் பசுமை வரி என்ற பெயரில் ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.