Connect with us

தமிழகத்தில் 25 சுங்கசாவடிகளில்… இன்று முதல் அமலுக்கு வரும் கட்டண உயர்வு…!

Latest News

தமிழகத்தில் 25 சுங்கசாவடிகளில்… இன்று முதல் அமலுக்கு வரும் கட்டண உயர்வு…!

தமிழகத்தில் 25 சுங்க சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என்று இரண்டு முறை கட்டணம் மாற்றியமைக்கப்படுகின்றது.

தேர்தல் காரணமாக இந்த வருடம் ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்கு மாறாக ஜூன் மாதம் 36 சுங்க சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. ஐந்து சதவீதம் வரை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் வருகிற செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் மீதமுள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வருகின்றது. அதன்படி 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடிகள் வழியாக கடந்து செல்லும் வாகனங்கள் சுமார் 5 முதல் 150 வரை ஏற்கனவே இருக்கும் கட்டணத்தை விட கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

More in Latest News

To Top