tamilnadu
பட்டென்று உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதோ…!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்திருக்கின்றது.
ஆபரண தங்கத்தின் விலை கடந்த மாதம் முதலே 50 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வந்தது. அதன் பிறகு சற்று குறைந்திருந்த தங்கத்தின் விலை தற்போது 50 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. நேற்று தங்கம் ஒரு கிராமுக்கு 6,330 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரு கிராமுக்கு இருபது ரூபாய் உயர்ந்து 6,350 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.
அதேபோல் 200 சவரனுக்கு 240 உயர்ந்து 50,800 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலையும் தற்போது குறைந்து இருக்கின்றது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் 86.50 காசுகளுக்கும், 1 கிலோ பார் வெள்ளி 500 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது.