Connect with us

வாரத்தின் முதல் நாளிலே… அதிரடியாக குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம்…!

tamilnadu

வாரத்தின் முதல் நாளிலே… அதிரடியாக குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம்…!

வாரத்தின் தொடக்கத்திலேயே தங்கம் விலை குறைந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் 55 ஆயிரத்தை கடந்தது. இது ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இனி வரும் நாட்களில் தங்கம் என்பது எட்டாக்கனியாகிவிடும் என்று அனைவரும் நினைத்தனர்.

அந்தளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

எதிரொலியாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது. இது மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 51,320 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 6,415 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது .வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 89. 50 காசுக்கு விற்பனையாகி வருகிறது.

More in tamilnadu

To Top