Latest News
2-வது நாளாக மீண்டும் குறைந்த தங்கம் விலை… இன்றைய தங்கம் நிலவரம் இதோ…!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 குறைந்து விற்பனையாகி வருகின்றது.
இந்தியாவில் தினம்தோறும் சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படும். கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. அதிலும் ஜூலை மாதம் ஒரு சவரன் தங்கம் 55 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வந்தது. அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது.
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை குறைத்து அறிவித்தது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இதனால் ஒரு சவரன் 51 ஆயிரத்துக்கும் சென்றது. ஆனால் இந்த சந்தோஷம் தொடர்ந்து நீடிக்கவில்லை. மீண்டும் பழையபடி தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கின. அந்த வகையில் ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகின்றது.
நேற்று தங்கம் விலை 120 ரூபாய் குறைந்து இருந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை சற்று குறைந்து இருக்கின்றது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. ஆபரண தங்கம் கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து 6,850 க்கு விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலை கிராமிற்கு 1 ரூபாய் குறைந்து 96 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.