---Advertisement---

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… தங்கம் விலை குறைவு… இன்றைய நிலவரம் இதோ…!

Published on: September 12, 2024
---Advertisement---

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து விற்பனையாகி வருகின்றது.

இந்தியாவில் ஒவ்வொரு தினமும் சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வந்தது. அதிலும் ஜூலை மாதம் ஒரு சவரன் தங்கம் விலை 55 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வந்தது. அதனையடுத்து கடந்த மாதம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தது.

அதில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தங்கம் விலை மளமளவென சரிந்தது ஒரு சவரன் 51 ஆயிரத்துக்கு கீழே விற்பனையாகி வந்தது. ஆனால் அது தொடர்ந்து நீடிக்கவில்லை. மீண்டும் பழையபடி ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை இருந்து வந்தது,

உயரும்போது அதிக அளவில் உயரும் தங்கம் விலை சரியும்போது குறைந்த அளவில் சரிந்து வந்தது. தற்போது ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரம் விற்பனையாகி வருகின்றது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு 280 உயர்ந்து 53 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கின்றது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 640க்கு விற்பனையாகி வருகின்றது. ஆபரண தங்கம் கிராமிற்கு பத்து ரூபாய் குறைந்து 6,705 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 91.50 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.