Latest News
மாத தொடக்கத்திலேயே சற்று குறைந்த தங்கம் விலை… இன்றைய தங்கம் நிலவரம் இதோ…!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து இருக்கின்றது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த ஜூலை மாதம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து 55 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வந்தது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது .
அதில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும் பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி தெரிவித்திருந்தார். பட்ஜெட் எதிரொலியால் கடந்த மாதம் தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது.
தங்கம் விலை 51 ஆயிரம் ரூபாய்க்கு கீழே சரிந்ததால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள். இதையடுத்து தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. நேற்று தங்கம் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் சவரனுக்கு 53 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.
இன்று தங்கம் விலை சற்று குறைந்து இருக்கின்றது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், ஆபரண தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 670 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 91 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.