Latest News
இன்றும் உயர்ந்த தங்கம் விலை… உச்சகட்ட அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்… இன்றைய நிலவரம் இதோ..!
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து விற்பனையாகி வருகின்றது. இது நகைப் பிரியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தங்கம் விலையானது கடந்த ஜூலை மாதம் முதலே தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதே மாதம் 22 ஆம் தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைப்பதாக தெரிவித்திருந்தது. இதன் எதிரொலியால் தங்கம் விலை சவரனுக்கு 2,200 வரை குறைந்தது. அதன் பிறகு விலை குறைந்து கொண்டே சென்று சவரன் 51 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக விற்பனையானது.
இது நகை பிரியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் அது சில நாட்கள் மட்டுமே. ஆகஸ்ட் மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியது அதிலும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. கடந்த மாதம் 24 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 7000 ரூபாயை தொட்டது.
நேற்று முன்தினம் சவரனுக்கு 400 ரூபாய் அதிரடியாக உயர்ந்த நிலையில் மேலும் இன்று தங்கம் விலை உயர்ந்திருக்கின்றது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 56 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. கிராமுக்கு 10 ரூபாய் 7,120 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்து இருக்கின்றது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து 103 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.