- Homepage
- Latest News
- அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ…!
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ…!
சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 320 ரூபாய் உயர்ந்து விற்பனையாகி வருகின்றது. இது நகை பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்த அதிகரித்து வந்த தங்கம் விலை மத்திய பட்ஜெட் அறிவித்த பிறகு கடகடவென சரிந்தது. தங்கம் சவரனுக்கு 2,200 வரைக்கும் விரைந்து 51 ஆயிரம் ரூபாய்க்கு கீழே விற்பனையாகி வந்தது. தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே வந்தது. இது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை கொடுத்தது.
இருப்பினும் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கியது. அதிலும் கடந்த 10 நாட்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. கடந்த 24ஆம் தேதி ஒரு கிராம் 7000 ரூபாயை தொட்டது. இது நகை பிரியர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
இந்நிலையில் தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்ந்திருக்கின்றது. அதன்படி சென்னையில் ஒரு சவரன் தங்கம் 320 ரூபாய் உயர்ந்து 56 ஆயிரத்து 820 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து 7,100 விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 12 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.