tamilnadu
3-வது நாளாக தொடர்ந்து உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதோ…!!
மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்திருக்கின்றது. இது நகை பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
தங்கம் விலை கடந்த மாதம் கிடுகிடுவென்று உயர்ந்து சவரன் 55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வந்தது. இதைடுத்து கடந்த மாதம் 23ஆம் தேதி மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது.
இதனால் விலை கிடுகிடுவென்று சரிந்து கடந்த ஏழாம் தேதி ஒரு சவரன் 51 ஆயிரத்துக்கு கீழே சென்றது. கடந்த நான்கு மாதங்களுக்கு பிறகு விலை இந்த அளவுக்கு குறைந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றது.
நேற்று முன்தினம் சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்திருந்த நிலையில் நேற்று அதிரடியாக சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்தை தாண்டி இருந்தது. மூன்றாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்திருக்கின்றது. அதன்படி சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, 51 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. மேலும் தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 6,445 விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 88 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.