வாரத்தின் தொடக்கத்திலேயே தங்கத்தின் விலை உயர்ந்திருக்கின்றது.
தங்கம் விலை கடந்த மாதம் கிடுகிடுவென்று அதிகரித்து 55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வந்தது. இதனால் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார்கள். ஏழை எளிய மக்களுக்கு தங்கம் என்பது எட்டா கனியாகி விடும் என்று நினைக்கும் அளவிற்கு தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதையடுத்து 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
அதில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து ஆறு சதவீதம் வரை குறைத்திருந்தது. மேலும் விளையாட்டு இனத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6 % வீதமாக குறைக்கப்பட்டது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார். இதன் எதிரொலியாக கடந்து சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.
இதனால் நகைப்பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள் .நேற்று தங்கம் விலை சவரனுக்கு எந்த வித மாற்றமும் இல்லாமல் 51 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று சற்று உயர்ந்திருக்கின்றது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 உயர்ந்து 51 ஆயிரத்து 760 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து 6410 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 91 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.