tamilnadu
தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை… இன்று தங்கம், வெள்ளி நிலவரம் இதோ…!
தங்கம் விலை சவரனுக்கு 240 குறைந்திருக்கின்றது. இந்த மாதம் தொடக்க முதலே ஏறுமுகமாக இருந்த தங்கத்தின் விலை பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது. பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இதனால் தங்கம் விலை குறையும் என்று தெரிவித்து வந்தனர். அந்த வகையில் பட்ஜெட் அறிவித்த நாள் முதலே தங்கம் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 51 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 6,385 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலை 50 பைசா குறைந்து 89 ரூபாய்க்கும், கிலோவுக்கு ரூபாய் 500 குறைந்து 89 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது.