Latest News
2-வது நாளாக மீண்டும் குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதோ…!
கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வரும் நிலையில் மீண்டும் தங்கம் விலை குறைந்திருக்கின்றது.
தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் கடகடவென்று உயர்ந்து சவரனுக்கு 55 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையாகி வந்தது. இதையடுத்து 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை குறைந்து கொண்டே வந்தது.
ஒரு சவரன் 51 ஆயிரத்திற்கு கீழே குறைந்தது. இதனால் நகை பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். இருப்பினும் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. மீண்டும் பழைய ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த 16ஆம் தேதி தங்கம் விலை மீண்டும் 55 ஆயிரம் ரூபாயை கடந்து சென்றது
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் தற்போது இன்று மீண்டும் குறைந்திருக்கின்றது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. ஆபரண தங்கம் கிராமிற்கு 25 ரூபாய் குறைந்து 6,825 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் 96 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.