Latest News
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… நகைப் பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்… இன்றைய நிலவரம் இதோ..!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து விற்பனையாகி வருகின்றது.
இந்தியாவில் தினம் தோறும் சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. கடந்த சில தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வந்தது. அதிலும் ஜூலை மாதம் ஒரு சவரன் தங்கம் 55 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வந்தது. அதன் பின்னர் மத்திய பட்ஜெட் மக்களுக்கு சற்று ஆறுதல் கொடுத்தது.
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் தங்கம் விலை மளமளவென குறைந்தது. அடுத்தடுத்த நாட்களில் விலை வெகுவாக குறைந்து ஒரு சவரன் 51 ஆயிரத்துக்கு கீழேயும் சென்றது. ஆனால் இந்த சந்தோஷம் கொஞ்ச நாளைக்கு மட்டும் தான் நீடித்தது. மீண்டும் பழையபடி தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது .
அந்த வகையில் ஒரு சவரன் தங்கம் விலை 53,000 கடந்து விற்பனையாகி வந்தது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருக்கின்றது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.
ஆபரண தங்கம் கிராமுக்கு 120 ரூபாய் உயர்ந்து 6,825 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 95 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.