Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

Latest News tamilnadu

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… இன்றைய தங்கம் நிலவரம் இதோ…!

தங்கம் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலைக்கு விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் கடகடவென்று உயர்ந்து சவரன் 55 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனையாகி வந்தது. இது நடுத்தர மக்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இனிமேல் நம் வாழ்வில் தங்கம் என்பது இல்லாத ஒன்றாக மாறிவிடுமோ என்று எண்ணி வந்தனர்.

இந்நிலையில் 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தின் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைத்து அறிவித்தார். இதையடுத்து தங்கம் மற்றும் வெள்ளி தொடர்ந்து சரிவை சந்தித்தது.

கடந்த சில நாட்களாக தங்கம் ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகி வந்த நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. இன்று தங்கம் விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் விற்பனையாகி வருகின்றது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் சாவரனுக்கு 53 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் விலை 6670 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது, அதேபோல் வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 91 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.