Latest News
சற்று சரிவை சந்தித்த தங்கம் விலை…. இன்றைய விலை நிலவரம் இதோ…!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை கடந்த மாதம் தொடக்கம் முதலே கடகடவென அதிகரித்து சவரன் 55 ஆயிரம் கடந்து விற்பனையாகியது. இந்த விலை நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் ஏழை, எளிய மக்கள் இனி தங்கம் என்பது நம் வாழ்க்கையில் எட்டாக்கனியாகி விடும் என்று என்ன தோன்றியது.
இந்த நிலையில் 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார், பட்ஜெட் எதிரொலி காரணமாக கடந்து சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது.
இது நகைப்பிரியர்கள் மற்றும் மக்களிடையே மகிழ்ச்சியை கொடுத்தது. இதை தொடர்ந்து நேற்று தங்கம் விலை மாற்றம் எதுவும் இல்லாமல் ஒரு சவரன் 53 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது, அந்த விலையில் இருந்து இன்று தங்கம் விலை சற்று குறைந்து இருக்கின்றது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் சவரனுக்கு உயர்ந்து 53 ஆயிரத்து 640 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் ரூபாய் 10 குறைந்து 6,705 ரூபாய் விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 93 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.