---Advertisement---

நான்கு நாட்களுக்குப் பிறகு சற்று உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் இதோ…!

Published on: August 28, 2024
---Advertisement---

சென்னையில் ஆபரண தங்கம் விலை நான்கு நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்து இருக்கின்றது. கடந்த மாதம் முழுவதும் தங்கம் விலை கிடுகிடுவென்று உயர்ந்து சவரனுக்கு 55 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வந்தது. இது நடத்துற மற்றும் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியிருந்தது. தங்கம் என்பது எட்டாக்கனியாகிவிடும் என்று எண்ணி வந்தனர்.

இந்நிலையில் 2024 மற்றும் 25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து ஆறு சதவீதமாக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை மூன்று நாட்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் 53, 440 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று சற்று உயர்ந்திருக்கின்றது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. மேலும் ஆபரண தங்கம் கிராமுக்கு இருபது ரூபாய் உயர்ந்து 6,715 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராமுக்கு 93.50 விற்பனையாகி வருகின்றது.