சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் 7,100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.
ஒவ்வொரு நாளும் சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்றபடி தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும். இந்நிலையில் தங்கம் விலை தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றது. இதனால் நகை பிரியர்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர், ஏழை எளியோர்கள் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
ஒரு நல்ல விஷயத்துக்காக தங்கம் வாங்க நினைப்பவர்கள் கூட கவலை அடைந்து இருக்கிறார்கள். கடந்த 4-ம் தேதி புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை 7000 ரூபாயை கடந்து விற்பனையாகி வந்தது. இதை தொடர்ந்து நேற்று சவரன் 160 ரூபாய் குறைந்து விற்பனையாகி வந்தது.
இந்நிலையில் இன்று தங்கத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருகின்றது. அதன்படி ஒரு கிராம் தங்கம் விலை 7,100 க்கும் ஒரு சவரன் தங்கம் விலை 56 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெள்ளி விலையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 102 ரூபாய்க்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.