Latest News
தங்கம் விலை சற்று குறைவு… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ…!
சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்த அதிகரித்து வந்த தங்கம் விலை மத்திய பட்ஜெட் அறிவித்த பிறகு கடகடவென சரிந்தது. தங்கம் சவரனுக்கு 2,200 வரைக்கும் விரைந்து 51 ஆயிரம் ரூபாய்க்கு கீழே விற்பனையாகி வந்தது. தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே வந்தது. இது நகைப்பிரியர்களிடையே அதிர்ச்சியை கொடுத்தது.
இருப்பினும் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை உயர தொடங்கியது. அதிலும் கடந்த 10 நாட்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. கடந்த 24ஆம் தேதி ஒரு கிராம் 7000 ரூபாயை தொட்டது. இது நகை பிரியர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்தது. நேற்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை அவருக்கு 120 ரூபாய் குறைந்து 56 ஆயிரத்து 640க்கும், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 7,080 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் 101 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.