Latest News
தொடர்ந்து உயரும் தங்கம் விலை… ஒரு கிராம் 7000-ஐ தாண்டியது… பொதுமக்கள் அதிர்ச்சி…!
தங்கம் விலை இன்று வரலாறு காணாத அளவிற்கு ஒரு கிராம் 7000-ஐ தாண்டி விற்பனையாகி வருகின்றது.
கடந்த ஜூலை மாதம் வரை தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை அந்த மாதம் 22 ஆம் தேதிக்கு பிறகு சரிவை சந்தித்தது. அதற்கு காரணம் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைத்தது தான். இதனால் தங்கம் விலை சவரனுக்கு 2200 வரை குறைந்தது. தொடர்ச்சியாக விலை குறைந்து கொண்டே சென்று சவரன் 51 ஆயிரத்திற்கு கீழே சென்றது.
இதனால் நகைபிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டும் தான் நீடித்தது. பின்னர் கடந்த மாதம் தங்கம் விலை உயர தொடங்கியது. தங்கம் விலை கடந்த 10 நாட்களாக தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. கடந்த 13ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு 960 அதிகரித்தது.
நேற்றைய தினம் சவரனுக்கு 160 ரூபாய் தங்கம் விலை உயர்ந்து 56 ஆயிரம் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்து 7000 ரூபாயை கடந்திருக்கின்றது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 760 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.
ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று 480 ரூபாய் உயர்ந்து 56 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலை கிராம் இருக்கும் மூன்று ரூபாய் உயர்ந்து 101 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. இது நகை பிரியர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.