tamilnadu
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை… நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி…!
கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகின்றது. அந்த வகையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்திருக்கின்றது.
நாடாளுமன்றத்தில் 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து ஆறு சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது.
இது நகை பிரியர்களுக்கு இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து தங்கம் விலை 51 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே குறைந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த வாரம் முதலே தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகின்றது.
சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று 53 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து அதன்படி ஒரு சவரன் தங்கம் விலை 53 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. மேலும் தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் 6710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.