tamilnadu
சற்று சரிவை சந்தித்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ…!
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றது. இருப்பினும் கடந்த மாதம் தங்கம் ஒரு சவரனுக்கு 55 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையாகி வந்தது. விரைவில் 60 ஆயிரத்து எட்டிவிடும் என்று மக்கள் பலரும் அஞ்சி வந்தனர். அந்த வேலையில் தான் மத்திய நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார்.
2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரை 6% குறைக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தங்கம் விலை கடகடவென்று சரிய தொடங்கியது. இது நகை பிரியர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அந்த வகையில் கடந்த சில நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி 53 ஆயிரம் ரூபாயை கடந்து வருகின்றது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு எந்தவித மாற்றமும் இல்லாமல் 53 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. இன்று தங்கம் விலை சற்று குறைந்து இருக்கின்றது.
அதன்படி சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 53,280 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. மேலும் ஆபரண தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்த 6,660 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து 92 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.