---Advertisement---

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம் இதோ…!

Published on: August 17, 2024
---Advertisement---

தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்றைய நிலவரப்படி  உயர்ந்து இருக்கின்றது.

கடந்த மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை கிடுகிடுவென்று உயர்ந்து 55 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வந்தது. மக்கள் பலரும் தங்கம் என்பது இனி நம் வாழ்வில் எட்டா கனியாகிவிடும் என்று எண்ணத் தொடங்கினர். அதையடுத்து நாடாளுமன்றத்தில் 2024 மற்றும் 25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். இதில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதன் தாக்கம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள்.

ஆனால் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றது. அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரன் 52,520 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 840 உயர்ந்து 53 ஆயிரத்து 360 ரூபாய்க்கும், தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 670 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூபாய் 2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 91 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now