தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து இருக்கின்றது. 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி 15 சதவீதத்திலிருந்து ஆறு சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது.
இதனால் தங்கம் விலை பெரும்பாலும் குறைந்து விற்பனையாகி வருகின்றது. பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு பிறகு தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வந்தது. ஆனால் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்து இருக்கின்றது. இன்று தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 6,420 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.
ஒரு சவரனுக்கு 280 உயர்ந்து 51, 360 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. ஆனால் வெள்ளி விலை சற்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து கிராமுக்கு 91 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 91 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.

