tamilnadu
அதிரடியாக குறைந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை… இன்றைய நிலவரம் இதோ…!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து இருக்கின்றது. இது நகை பிரியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்து இருக்கின்றது.
இன்று கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 6,400 க்கும் சவரனுக்கு 560 குறைந்து 51,200 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் வெள்ளி விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 87 ரூபாய்க்கும், கிலோவுக்கு 4000 ரூபாய் குறைந்து ஒரு கிலோ பார் வெள்ளி 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது.